கரூரில் அரசுப்பள்ளி ஆசிரியரின் வங்கிக் கணக்கில் இருந்து 3 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் நூதன முறையில் திருடியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குளித்தலையை சேர்ந்த கலைமணி என்பவருக்கு வங்கி அதிகாரி எனக்கூறி மர்ம நபர் பேசியபோது, சந்தேகமடைந்து இணைப்பை அவர் துண்டித்துள்ளார். ஆனால், அவரது செல்போனுக்கு வந்த போலியான வங்கி லிங்க்கை, கலைமணியின் மகள் கிளிக் செய்து ஓடிபி எண்ணை கொடுத்துள்ளார். அப்போது, வங்கிக் கணக்கில் இருந்து 3 லட்சத்து 24 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கலைமணி, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்ததால், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Wednesday, June 1, 2022
உஷாரான ஆசிரியர்... ஆனால் OTP ஐ சொன்ன மகள்... காணாமல் போன 3.24 லட்சம்
Tags
# Latest News
# OTP
# VIDEOS
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
VIDEOS
Tags:
Latest News,
OTP,
VIDEOS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment