செய்தி வெளியீடு
நிதி (வழிவகைகள்-II )த் துறை
தமிழ்நாடு அரசு ரூபாய் 2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 30 ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் ஜீன் 28, 2022 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் (Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) ஜீன் 28, 2022 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,
நிதித்துறை சென்னை
CLICK HERE TO DOWNLOAD
No comments:
Post a Comment