'மாணவர்கள் பொதுப்பணிகளில் ஈடுபடுவதை கடுமையாக பார்க்கக்கூடாது. நிச்சயமாக ஒரு லட்சுமண ரேகை உள்ளது.அதை மாணவர்கள் ஒருபோதும் தாண்டக்கூடாது' என, உயர் நீதி மன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி அருகே கள்ளிக்குளத்தைச் சேர்ந்த சூர்யா, திருநெல்வேலி செயின்ட் ஜான்ஸ் கல்லுாரி மாணவர்.
'சஸ்பெண்ட்'
ஒரு பள்ளி மாணவியின் தற்கொலை வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வலியுறுத்தி, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற மாணவர் அமைப்பு சார்பில், சென்னையில் தடையை மீறி முதல்வரிடம் மனு அளிக்க ஊர்வலமாக செல்ல முயன்றார்.இதில், சூர்யா உட்பட சிலர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்ததில், சூர்யா கைது செய்யப்பட்டார். பிப்., 22ல் ஜாமினில் வந்தார். பிப்., 24ல் சூர்யாவை கல்லுாரி நிர்வாகம், 'சஸ்பெண்ட்' செய்தது.
இதை ரத்து செய்து, தொடர்ந்து கல்லுாரியில் அனுமதிக்க உத்தரவிடக்கோரி, சூர்யா உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். கல்லுாரி நிர்வாக தரப்பு, 'மனுதாரர் கிரிமினல் வழக்கில் கைது செய்யப்பட்டதால், மாணவர்களிடையே ஒழுக்கத்தை பேண, சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது' என, தெரிவித்தது. முதல் பட்டதாரி நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் மிக சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தந்தை கொத்தனார். மனுதாரர் இறுதி செமஸ்டரில் இருக்கிறார். அவர் அனுதாபம், அதிக அக்கறையுடன் நடத்தப்பட தகுதியானவர். படிப்பை முடித்ததும் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருப்பார்.கல்லுாரி நிர்வாகம் அனுமதிக்காததால், மனுதாரரால் வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை.
அவரது எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இவ்வழக்கின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மனுதாரரை அடுத்து நடைபெறும் தேர்வுகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.மாணவர் இயக்கம் தமிழக அரசியலுக்கு அந்நியமானது அல்ல என்பதை நீதித்துறை கவனத்தில் கொள்கிறது.
உத்தரவு ரத்து
மாணவர்கள் பொதுப் பணிகளில் ஈடுபடுவதை, கடுமையாக பார்க்கக் கூடாது. நிச்சயமாக ஒரு லட்சுமண ரேகை உள்ளது. அதை மாணவர்கள் ஒருபோதும் தாண்டக்கூடாது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவர்கள், அந்த கோட்டிற்குள் இருப்பது எனக்கு திருப்தியளிக்கிறது. அவர்கள் எவ்வித வன்முறையிலும் ஈடுபடவில்லை. மனுதாரரை சஸ்பெண்ட் செய்த கல்லுாரி நிர்வாகத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment