பொள்ளாச்சி அரசு கல்லுாரி என பெயர் மட்டுமே மாறிய நிலையில், நிர்வாகம் முழுமையாக மாறவில்லை. இதனால், கூடுதல் பாடப்பிரிவுகள் துவங்காததால், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.பொள்ளாச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து, சமத்துார் ராம ஐயங்கார் மேல்நிலைப் பள்ளியில், கடந்த, 2017ம் ஆண்டு பாரதியார் பல்கலை உறுப்புக்கல்லுாரி துவங்கப்பட்டது.
முதற்கட்டமாக, பி.காம்., (சிஏ), பி.காம்., (பிஏ), பி.பி.ஏ., பி.எஸ்.சி., (கணிதம்), பி.ஏ., (ஆங்கிலம்) ஆகிய பாடப் பிரிவுகளுடன் துவங்கப்பட்டன. இதுவரை, 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து கல்லுாரியில் இருந்து வெளியே சென்றனர்.ஆண்டுகள், ஐந்து கடந்தும் இன்னும் கல்லுாரியில் புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்படவில்லை. கல்லுாரி தரப்பில் கேட்டால், 'அரசிடம் கேட்டுள்ளோம்; புதிய பாடப்பிரிவுகள் வந்து விடும்,' என மாறாத பதில் மட்டும் ஆண்டுதோறும் சொல்லப்படுகிறது.இதுவரை பாடப்பிரிவுகளும் கூடுதலாக துவங்கவில்லை. இதனால், விரும்பிய பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்ய முடியாத நிலை உள்ளது. பெயர் மாறியது!
பாரதியார் பல்கலை உறுப்பு கல்லுாரியாக இருந்தது, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியென பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் பல்கலை நிர்வாகம், அரசு கல்லுாரி நிர்வாகத்துக்கு மாறவில்லை.தற்போது வரை பாரதியார் பல்கலை சார்பில் நியமிக்கப்பட்ட முதல்வர், பேராசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். நிரந்தர பேராசிரியர்கள், கல்லுாரி முதல்வர் நியமிக்க முடியாத நிலை உள்ளதுடன், புதிய பாடப்பிரிவுகள் துவங்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது.
ஏமாற்றமே மிச்சம்
ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பல கனவுகளோடு அரசு கல்லுாரி வாயிலுக்கு வருகின்றனர். விரும்பிய பாடப்பிரிவை படிக்க முடியாமல் திரும்பிச் சென்று பல ஆயிரம் ரூபாய் செலவழித்து தனியார் கல்லுாரிகளில் படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இளநிலை படிப்பிலும் குறைந்த பாடப்பிரிவுகளே உள்ளதால் கல்லுாரியில் சேர முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். ஊருக்கு ஒரு கல்லுாரியென, இந்த கல்லுாரி உள்ளதால், முழுமையாக ஏழை மாணவர்கள் பயன்பெற முடியாத நிலை ஏற்படுகிறது. காழ்புணர்ச்சியா?
பொள்ளாச்சி அரசு கல்லுாரி, கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. முதல் முறையாக ஐந்து பாடப்பிரிவுகளுடன் துவங்கப்பட்ட கல்லுாரியில், கூடுதல் பாடப்பிரிவுகள் துவங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.தி.மு.க., தற்போது ஆட்சியில் உள்ள சூழலில், கல்லுாரி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது.நிதிநிலை சரியில்லை என காரணமாக கூறி அரசியல் காழ்புணர்ச்சியால் கல்லுாரி மேம்பாடு பணிகள் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.அரசியல் கட்சியினர் விளையாட்டால், ஏழை மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கிறது. குறைந்த கட்டணத்தில் படித்து முதுநிலை படிப்பும் முடிக்கலாம் என்ற மாணவர்களின் கனவு பலிக்காத நிலை ஏற்பட்டுள்ளது.பொள்ளாச்சி அரசு கல்லுாரி கட்டட கட்டுமான பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் கல்லுாரி, இட நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். எப்போது நிறைவேறும்!
கல்லுாரி கல்வித்துறையின் கோவை மண்டல இணை இயக்குனர் உலகி கூறுகையில், ''பொள்ளாச்சி அரசு கல்லுாரி கட்டடம் திறக்க அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும் திறக்கப்படும். இக்கல்லுாரி அரசு கல்லுாரி கட்டுப்பாட்டுக்கு மாற வேண்டும்.அதன் பின், பேராசிரியர்கள், கல்லுாரி அலுவலர்கள் என அனைத்து பணியிடம் உருவாக்கப்பட்டு, கல்லுாரி முழுமையாக செயல்பாட்டுக்கு வரும். கூடுதல் பாடப்பிரிவுகள் துவங்கப்படும். இதுகுறித்து அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.

No comments:
Post a Comment