அரசு பாலிடெக்னிக் சேர்க்கைக்கு ஜூலை 1ல் பதிவு துவக்கம் - Daily Dhuniya

Breaking

Friday, June 17, 2022

அரசு பாலிடெக்னிக் சேர்க்கைக்கு ஜூலை 1ல் பதிவு துவக்கம்

அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாமாண்டு டிப்ளமா மாணவர் சேர்க்கைக்கு, ஜூலை 1 முதல் விண்ணப்பப் பதிவு துவங்க உள்ளது.

தமிழகம் முழுதும், 51 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 17 ஆயிரத்து 935 டிப்ளமா இடங்கள்;

அரசு நிதியுதவி பெறும் 34 கல்லுாரிகளில், 14 ஆயிரம் இடங்கள்; 405 சுயநிதி கல்லுாரிகளில், 1.35 லட்சம் இடங்கள் என, மொத்தம் 1.67 லட்சம் இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதில், 10ம் வகுப்பு முடித்தோர் முதலாம் ஆண்டிலும், பிளஸ் 2 முடித்தோர் இரண்டாம் ஆண்டிலும் சேரலாம்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கு, அரசின் கவுன்சிலிங் வழியே மாணவர்கள் சேர்க்கப்படுவர். மற்ற கல்லுாரிகளில், நிர்வாகமே நேரடி சேர்க்கையை நடத்தும். முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஜூலை 1ல் துவங்கும் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதற்கான விபரம் வரும் 30ம் தேதி, ஆன்லைன் தளத்தில் அறிவிக்கப்படும்.

இதில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், ஜூலை 15க்குள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு பிரிவு மற்றும் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், ஜூலை 22; பொது ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு, ஜூலை 29 முதல் கவுன்சிலிங் நடத்தப்படும் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, டிப்ளமா படிப்பில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு, ஜூன் 23ல் ஆன்லைன் பதிவு துவங்க உள்ளது. ஜூலை 8 வரை பதிவு செய்யலாம். இதற்கான விதிகள் மற்றும் கல்வி தகுதி விபரங்கள், வரும் 22ம் தேதி வெளியாகும் என, உயர்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment