எல்.கே.ஜி., வகுப்புகளில் ஆசிரியர் இல்லாததால், அங்கன்வாடி ஆயாக்கள் வாயிலாக பாடம் நடத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மாநிலம் முழுதும், 2,381 அரசு தொடக்க பள்ளி வளாகங்களில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மழலையர் வகுப்புகள் உள்ளன. அவற்றில், 59 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும் நடப்பு கல்வி ஆண்டு முதல், எல்.கே.ஜி., வகுப்புகளை மூட முடிவு செய்யப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன.இதையடுத்து, எல்.கே.ஜி., வகுப்புகளை மூடும் முடிவை, தமிழக அரசு வாபஸ் பெற்றது. ஆனால், இந்த வகுப்பில் பாடம் எடுத்த, அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்கள், வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், தனியார் பள்ளிகளில் சேர முடியாத பலர், அரசு பள்ளி எல்.கே.ஜி., வகுப்புகளில் சேர துவங்கி உள்ளனர்.
ஆனால், பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. அரசு அறிவித்தபடி சிறப்பாசிரியர்கள் நியமிக்கும் வரை, அங்கன்வாடி ஆயாக்கள் மற்றும் அமைப்பாளர்களை வைத்து, பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. அரசு அறிவித்தபடி சிறப்பாசிரியர்கள் நியமிக்கும் வரை, அங்கன்வாடி ஆயாக்கள் மற்றும் அமைப்பாளர்களை வைத்து, பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment