கடலூரில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கரும்பு ஆராய்ச்சி நிலைய தலைவா் தி.சசிக்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் கடலூரில் கரும்பு ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு திறந்தவெளி, தொலைநிலை கல்வித் திட்டம் மூலம் படிக்க மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. அதாவது வேளாண் இடுபொருள், உயிரியல் பூச்சி மற்றும் நோய்க் கொல்லிகள் உற்பத்தி குறித்த பட்டயப் படிப்புக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வி அடைந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். இதில் 6 மாத காலம் மற்றும் ஓராண்டு படிப்பும் உள்ளது.
இதேபோல, நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த சான்றிதழ் படிப்புக்கு பிளஸ்2 வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது ஓராண்டு படிப்பாகும். பட்டய, சான்றிதழ் படிப்புகள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே பயிற்றுவிக்கப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கடலூா் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தை 04142-220630 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவித்தாா்.

No comments:
Post a Comment