7ம் வகுப்பு மாணவரிடம் ரூ.46 ஆயிரம் வசூல்! - Daily Dhuniya

Breaking

Friday, June 10, 2022

7ம் வகுப்பு மாணவரிடம் ரூ.46 ஆயிரம் வசூல்!

மதுரையில் 'பப்ஜி' ஆன்லைன் விளையாட்டில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்வதற்கான 'பாயின்ட்'களை பள்ளி மாணவர்களுக்கு விற்று, சம்பாதித்த கல்லுாரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

சமீபகாலமாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பலர் படிப்பை விட ஆன்லைன் விளையாட்டில் அதிக கவனம் செலுத்துகின்றனர். 'பப்ஜி' எனப்படும் ஆன்லைன் விளையாட்டில் எடுக்கும் பாயின்ட்களை வைத்தே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். இதற்காக ஒவ்வொருவருக்கும் தனி பாஸ்வேர்ட் இருக்கும்.மாணவர்கள் பலர் பாயின்ட்கள் எடுக்க முடியாமல், இறுதி சுற்று வரை செல்ல முடியாமல் மனஅழுத்தத்திற்கு ஆளாகி, தற்கொலை செய்து கொள்கின்றனர். சில நாட்களுக்கு முன் பாஸ்வேர்ட்டை சக நண்பர்கள் திருடியதாக 'வாட்ஸ் ஆப்' ஸ்டேட்டஸ் வைத்து விட்டு கரூர் கல்லுாரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இவர் போல, மாதம் ஒரு மாணவராவது ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்வது தொடர்கிறது.

இந்த விளையாட்டில் எடுத்த கூடுதல் பாயின்ட்களை கல்லுாரி மாணவர்கள் சிலர், 200 முதல் 500 ரூபாய் வரை விற்று சம்பாதிக்கின்றனர். அந்த வகையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் கல்லுாரி மாணவர் மோகனசுந்தரம் என்ற சூர்யா, 18, தான் எடுத்த பாயின்ட்களை பள்ளி மாணவர்களுக்கு விற்று சம்பாதித்து வந்துள்ளார்.

இவரிடம் 46 ஆயிரம் கொடுத்து, சொக்கிக்குளம் பகுதி 7ம் வகுப்பு மாணவர், பாயின்ட்களை வாங்கியுள்ளார். பண பரிவர்த்தனைகள் ஆன்லைனில் நடந்துள்ளன.இதை அறிந்த மாணவனின் பெற்றோர், தல்லாகுளம் போலீசில் புகார் செய்தனர். கல்லுாரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment