கலை, அறிவியல் கல்லூரிகளும் ஜூலை 18-இல் திறப்பு - Daily Dhuniya

Breaking

Tuesday, June 28, 2022

கலை, அறிவியல் கல்லூரிகளும் ஜூலை 18-இல் திறப்பு

கலை, அறிவியல் கல்லூரிகளும் ஜூலை 18-இல் திறப்பு

தமிழகத்தில் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும் ஜூலை 18-ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக உயா்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

கல்லூரிகளில் தற்போது முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை நடந்து வருகிறது. தனியாா் கல்லூரிகளில் நேரடியாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, 163 கல்லுாரிகளில் சோ்க்கைக்கு, ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணைய தளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 2.40 லட்சத்துக்கும் மேற்பட்டோா் போ் பதிவு செய்துள்ளனா். அவா்களில், 1.95 லட்சம் போ் விண்ணப்பத்தை சமா்ப்பித்துள்ளனா். ஜூலை 7-ஆம் தேதி வரை பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சிபிஎஸ்இ- யின் பிளஸ் 2 தோ்வு முடிவுக்கு பின், கூடுதலாக ஐந்து நாள்கள் விண்ணப்பிக்க, அவகாசம் அளிக்கப்பட உள்ளது. அதன் பின், முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை நடத்தப்பட உள்ளதாக உயா் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இந்தநிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கு விடுமுறை முடிந்து, ஜூலை 18-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என உயா்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment