10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை - ரூ.50,000 வரை சம்பளம்..! - Daily Dhuniya

Breaking

Sunday, June 19, 2022

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை - ரூ.50,000 வரை சம்பளம்..!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் (Record Clerk) பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு.

பொது பிரிவினர் (GT) - 18 முதல் 32 வரைபிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (BC/MBC) - 18 முதல் 34 வரைஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (SC/ST) - 18 முதல் 37 வரை

விண்ணப்பங்களை https://kanniyakumari.nic.in/notice_category/recruitment/

என்ற வலைத்தள பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், உரிய சான்றிதழ் நகல்களுடன் சேர்த்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக ஜூலை 13-ல் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திருவட்டார், கன்னியாகுமரி மாவட்டம் 629177. உயிர்த்தியாகம் செய்யும் அக்னி வீரர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு .

No comments:

Post a Comment