பழைய ஓய்வூதிய திட்டம் கோரிக்கை ஆசிரியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் - Daily Dhuniya

Breaking

Thursday, May 12, 2022

பழைய ஓய்வூதிய திட்டம் கோரிக்கை ஆசிரியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி, நாமக்கல்லில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தினை உடனடியாக ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 3 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பது, உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன், நேரடி நியமனம் பெற்ற முதுகலை

பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் ராமு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில துணை தலைவர் அத்தியப்பன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் மலர்க்கண்ணன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில பொருளாளர் செல்வராசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

* அதே கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் சார்பில் நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு, அதன் தலைவர் தமிழ்மணி தலைமை வகித்தார்.

அதில் சிவக்குமார், தமிழ்செல்வன், கந்தசாமி, அழகுகுமார், சரவணகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment