புதுவை வேளாண் துறையில் சுயதொழில் மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து புதுவை அரசு வேளாண் துறையின் தோட்டக்கலைத் துறை கூடுதல் வேளாண் இயக்குநா் சி.சிவராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை அரசு வேளாண் துறையின் தோட்டக்கலை பிரிவானது, மத்திய அரசின் தேசிய தோட்டக்கலை இயக்ககம் மூலமாக தோட்டக்கலை பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மகளிா், இளைஞா்களுக்கு சுயவேலைவாய்ப்பை உருவாக்கவும், அவா்களது வேளாண் வருமானத்தை அதிகப்படுத்தி, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், 2022-23ஆம் ஆண்டுக்கான காளான் உற்பத்திக்கூடம் அமைத்தல், காளான் விதை உற்பத்திக்கூடம் அமைத்தல், பசுமைக்குடில், நிழல் வலைக்குடில் அமைத்தல், மண்புழு உர தொட்டி அமைத்தல், பண்ணை குட்டை அமைத்தல், பேக் ஹவுஸ் ஆகிய கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான கடனுடன் இணைக்கப்பட்ட பின் மானியம், மூலதன செலவின மானியம் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த விண்ணப்பங்களை தாவரவியல் பூங்காவில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குநா் (தோட்டக்கலை) அலுவலகம் மூலமாகவும் அல்லது வேளாண் துறையின் ட்ற்ற்ல்://ஹஞ்ழ்ண்.ல்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.
நிறைவு செய்த விண்ணப்பங்களை ஜூன் 10-ஆம் தேதிக்குள் மேற்கண்ட அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment