திறந்த நிலை, இணையவழி படிப்புகள்: உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அழைப்பு - Daily Dhuniya

Breaking

Sunday, May 22, 2022

திறந்த நிலை, இணையவழி படிப்புகள்: உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அழைப்பு

சென்னை, மே 18: திறந்த நிலை மற்றும் இணை யவழி புதிய படிப்புகளுக்கு அனுமதி கோரி உயர்கல்வி நிறுவனங்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக யுஜிசி தெரி வித்தது. இதுகுறித்துபல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் ரஜினிஷ் வெளியிட்ட அறி விப்பு: வருகிற கல்வியாண்டில் (2022-23) திறந் தநிலை, தொலை தூர மற்றும் இணையவழி படிப்புகளை பயிற்றுவிப்பதற்கான அங்கீகா ரம் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள் ளன. இதையடுத்து தகுதியான உயர்கல்வி நிறுவனங்கள் https://www.ugc.ac.in/என்ற யுஜிசி வலைத்தளம் வழியாக புதிய படிப்பு களை தொடங்குவதற்கு மே 31-ஆம் தேதிக் குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே அனுமதிபெற்ற பல்கலைக்க ழகங்கள் வேறு புதிய படிப்புகளுக்கும் விண் ணப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு விண் ணப்பிக்கும் உயர்கல்வி நிறுவனங்கள் யுஜிசி வழங்கிய விதிமுறைகளின்படி முறையான கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்க வேண் டும். விண்ணப்பித்த பின்னர் படிவங்களை பிரதி எடுத்து உரிய ஆவணங்களை இணைத்து யுஜிசி தலைமை அலுவலகத்துக்கு அஞ்சல் மூலம் ஜூன் மாதத்துக்குள் அனுப்பிவைக்க வேண்டும். அங்கீகாரம் பெறாமல் புதிய படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுசார்ந்த கூடு தல் விவரங்களை மேற்கண்ட இணையதளத் தில் அறிந்து கொள்ளலாம் என்று அந்த அறி விப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment