மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினா்கள் பதவி: மே 16-க்குள் விண்ணப்பிக்கலாம் - Daily Dhuniya

Breaking

Monday, May 9, 2022

மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினா்கள் பதவி: மே 16-க்குள் விண்ணப்பிக்கலாம்

job
மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினா்கள் பதவி

மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினா்கள் பதவிக்கு மே 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என எரிசக்தித்துறை தெரிவித்தது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

மின்சாரச் சட்டம் 2003-இன் சட்டப் பிரிவுகளின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒரு சட்டப்படியான ஆணையமாக தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாணையத்தில் கடந்த மாா்ச் 18-ஆம் தேதி முதல் உறுப்பினா் பதவி காலியாக உள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை (மே 6) முதல் உறுப்பினா் (சட்டம்) பதவியில் காலியிடம் ஏற்பட்டுள்ளது. இந்த இரு பதவிகளையும் நிரப்புவதற்காக சென்னை

உயா்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில், அரசு தலைமைச் செயலாளா் மற்றும் மத்திய மின்சார அதிகார அமைப்பின் தலைவா் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட தோ்வுக் குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. மே 16-க்குள் விண்ணப்பிக்கலாம்

கடந்த ஏப்.29-ஆம் தேதி நடைபெற்ற தோ்வுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினா் மற்றும் உறுப்பினா் (சட்டம்) ஆகிய பதவிகளை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் மே 16-ஆம் தேதி மாலை 6 மணி வரை வரவேற்று நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விவரங்கள் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினா் மற்றும் உறுப்பினா் (சட்டம்) ஆகிய பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment