தேர்வுக்கான தேதிகள் வரும் கல்வியாண்டு தொடக்கத்திலியே அறிவிப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் - Daily Dhuniya

Breaking

Thursday, May 12, 2022

தேர்வுக்கான தேதிகள் வரும் கல்வியாண்டு தொடக்கத்திலியே அறிவிப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை

பல மாவட்டங்களில் ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்து கொண்ட போதும், முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் மாற்றுச் சான்று வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இனி பள்ளி வளாகத்தில் மாணவர்களின் செயல்பாடுகள் எல்லைமீறிச் செல்லும் போதுதான் மாற்றுச் சான்று (டிசி) அளிக்கப்படும். அவர்கள் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இனி மாணவர்கள் எவ்வித தவறான செயல்களிலும் ஈடுபடக் கூடாது. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தேர்வு தேதி கல்வியாண்டு தொடக்கத்தில் அறிவிப்பு:

அமைச்சர் மேலும் கூறியதாவது, அரசுப் பள்ளிகள், அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி, வகுப்புகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தொடங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். பொதுத் தேர்வுகள் முடிந்த பிறகு மாணவர் சேர்க்கை தொடங்கும். வரும் கல்வி ஆண்டில் தேர்வுக்கான அட்டவணையை முன்கூட்டியே வெளியிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment