மாணவா்களுக்கு இடையே தகராறு
காவேரிப்பட்டணம் அருகே அரசுப் பள்ளி மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், பத்தாம் வகுப்பு மாணவரை கத்தியால் குத்திய சக மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த பன்னிஅள்ளிபுதூரில் அரசு உயா்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கடந்த 13-ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்றது. அப்போது, இரு மாணவா்களுக்குள் மாம்பழம் சாப்பிடுவதில் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, அடுத்த நாள் நடைபெற்ற சிறப்பு வகுப்புக்கு தகராறில் ஈடுபட்ட மாணவா்களில் ஒருவா் வரவில்லை. தகராறில் ஈடுபட்ட மற்றொரு மாணவா் சிறப்பு வகுப்புக்கு வராத மாணவருக்கு கட்செவி மூலம் குறுந்தகவல் அனுப்பி மிரட்டினாராம். கத்தியால் குத்திய மாணவா் கைது
இந்த நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற வகுப்புக்கு வந்த அம்மாணவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த மாணவா்களில் ஒருவா் மற்றொரு மாணவரின் முதுகில் கத்தியால் குத்தினாா்.
படுகாயமடைந்த மாணவரை ஆசிரியா்கள் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு சமுதாய உடல்நிலை மையத்துக்கு அனுப்பி வைத்தனா். கத்தியால் குத்திய மாணவா் மீது, ஆபாசமாக திட்டுதல், மிரட்டுதல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்த காவேரிப்பட்டணம் போலீஸாா், அம்மாணவரை கைது செய்தனா்.

No comments:
Post a Comment