விடைத்தாள் திருத்தும் முகாம்களில் மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்களை விடுவிக்க அரசு தேர்வுகள் துறை இயக்குனர் உத்தரவு - Daily Dhuniya

Breaking

Monday, May 30, 2022

விடைத்தாள் திருத்தும் முகாம்களில் மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்களை விடுவிக்க அரசு தேர்வுகள் துறை இயக்குனர் உத்தரவு

விடைத்தாள் திருத்தும் முகாம்களில் மதிப்பெண் சரிப்பார்ப்பு அலுவலர்களாக பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற பாட ஆசிரியர்களை நியமனம் செய்ய முகாம் அலுவலர்களுக்கான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சில முகாம்களில் தலைமையாசிரியர்களை மதிப்பெண் சரிப்பார்ப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. தற்சமயம் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறப்பு 13.06.2022 அன்று என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் அதன் தொடர்பான பணிகளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் தலைமையாசிரியர்களை முகாம் பணிகளில் இருந்து உடன் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது,

No comments:

Post a Comment