அண்ணாமலை பல்கலை. தொலைதூரக் கல்வியில் சேர்க்கை அனுமதி கோரி வழக்கு: யுஜிசி பதிலளிக்க உத்தரவு - Daily Dhuniya

Breaking

Tuesday, May 10, 2022

அண்ணாமலை பல்கலை. தொலைதூரக் கல்வியில் சேர்க்கை அனுமதி கோரி வழக்கு: யுஜிசி பதிலளிக்க உத்தரவு

தொலைதூரக் கல்வியில் சேர்க்கை

அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வியில் மாணவர்களைச் சேர்க்க அனுமதி கோரிய வழக்கில் பதிலளிக்க யுஜிசிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) ஒப்புதல் இல்லாமல் அண் ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூர வகுப்புகளை நடத்தி வருவதாக வும், அதனால் மாணவர்கள் அந்த வகுப்புகளில் சேர வேண்டாம் என்றும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி யுஜிசி அறிவிப்பு வெளியிட்டது. யுஜிசி பதிலளிக்க உத்தரவு

இதைரத்து செய்து, மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்கலை. பதிவாளர் தாக்கல் செய்த மனு: 2014-15-ஆம் கல்வியாண்டு முதல் யுஜிசி அங்கீகாரம் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. ஆண்டுதோறும் அங்கீகாரம் கோரி விண்ணப்பித்தபோதும்,அதன் மீதுஎந்தமுடிவும்அறிவிக்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொலைதூரக் கல் வியில் சேர்ந்து வரும் நிலையில், உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளா மல் பிறப்பிக்கப்பட்ட யுஜிசியின் இந்த அறிவிப்பு சட்டவிரோதமானது, நியாயமற்றது. எனவே, அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மையத்தில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதியளிக்க வேண்டும். அத்து டன் உரிய அங்கீகாரம் வழங்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் உத்தர விடவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் செவ்வாய்க்கிழமை விசார ணைக்கு வந்தபோது, கடந்த காலங்களில் இந்த உயர்நீதிமன்ற உத்தரவுக ளின் அடிப்படையில் தொலைதூரக் கல்வி மையத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் மேற்கொள்ளப்படும் மாண வர் சேர்க்கை கூட இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டதுதான் என்று அண்ணாமலை பல்கலைக்கழகம் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்குக்கு யுஜிசி பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வருகிற ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment