2021ம் ஆண்டு நடைபெற்ற யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு - முதல் 3 இடங்களில் பெண்கள் - Daily Dhuniya

Breaking

Monday, May 30, 2022

2021ம் ஆண்டு நடைபெற்ற யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு - முதல் 3 இடங்களில் பெண்கள்

முதல் 3 இடங்களில் பெண்கள்

யு.பி.எஸ்.சி., நடத்திய தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. முதல் 3 இடங்களை பெண்கள் முடித்துள்ளனர். அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்தல் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முக தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. அதன் இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 3 இடங்களை சுருதி ஷர்மா, அங்கீதா அகர்வால் மற்றும் காமினி சிங்லா ஆகியோர் பிடித்துள்ளனர்.
பிரதமர் வாழ்த்து

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை: 2021ம் ஆண்டு சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் போது, இந்தியாவின் வளர்ச்சி பணியில் முக்கியமான நேரத்தில் நிர்வாக பணியை துவங்கும் இந்த இளைஞர்களுக்கு வாழ்த்துகள். இவ்வாறு அந்த அறிக்கையில் மோடி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment