ஒருங்கிணைந்த புள்ளியல் சார்நிலை பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வானவர்கள் மூலச்சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா வெளியிட்ட அறிவிப்பு:
ஒருங்கிணைந்த புள்ளியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான, பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் 18ம் தேதி(இன்று) முதல் வருகிற 26ம் தேதி வரை(வேலை நாட்களில்) தங்களது மூலச்சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இசேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவ்விண்ணப்பதாரர்களுக்கு தெரிவு பணிகளில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை எனக் கருதி மேற்கண்ட பதவிக்கு அவர்களது விண்ணப்பம் பரிசீலனை எடுத்துக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Monday, April 18, 2022
Home
TNPSC
ஒருங்கிணைந்த புள்ளியல் சார்நிலை பணி - TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட அறிவிப்பு!
ஒருங்கிணைந்த புள்ளியல் சார்நிலை பணி - TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட அறிவிப்பு!
Tags
# TNPSC
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
TNPSC
Tags:
TNPSC
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment