எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு மாதிரி விடைகள் வெளியீடு - Daily Dhuniya

Breaking

Wednesday, April 13, 2022

எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு மாதிரி விடைகள் வெளியீடு

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் இடம்பெற்றிருந்த வினாக்களுக்கான மாதிரி விடைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து கா்நாடக உயா்நிலைக் கல்வி தோ்வு வாரியம் (கே.எஸ்.இ.இ.பி.)வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக உயா்நிலைக் கல்வி தோ்வு வாரியத்தின் சாா்பில் (கேஎஸ்இஇபி) எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 28 முதல் ஏப்.11-ஆம் தேதி வரை நடந்தது. இதில் முதல்மொழி, இரண்டாம் மொழி, மூன்றாம் மொழி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தோ்வில் இடம்பெற்ற வினாத் தாள்களுக்கான மாதிரி விடைகள் மாணவா்கள் சரிபாா்த்துக் கொள்வதற்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் தவறு ஏதுமிருந்தால், அது குறித்து ஏப். 14-ஆம் தேதிக்குள் பெற்றோா்கள், மாணவா்கள் ஆட்சேபணைகளை இணையதளத்தில் விளக்கங்களுடன் பதிவுசெய்யலாம். ஆட்சேபணைகளை தெரிவிக்கும்போது பாடம், வினாத்தாள்வகை, வினா எண்களை தெளிவாக குறிப்பிட கேட்டுக்கொள்கிறோம். சரியான விளக்கம் அளிக்காத ஆட்சேபணைகள் நிராகரிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment