பல்கலைக்கழகங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் - Daily Dhuniya

Breaking

Friday, April 15, 2022

பல்கலைக்கழகங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இடையே கல்வி மற்றும் ஆராய்ச்சியில் பரிமாற்றம் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் முன்னிலை வகித்தனர். தொழில்நுட்ப பல்கலை பதிவாளர் சிவராஜ், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ரவிக்குமார் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர்.

இந்த ஒப்பந்தம் மூலம் கல்வி, ஆராய்ச்சிகளில் இரு பல்கலைக்கழகங்கள் இடையே பரஸ்பர பரிமாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது. கூட்டாக ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஆசிரியர் பயிற்சிக்கான தொழில்நுட்ப கல்லுாரி தோற்றுவிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment