பள்ளிகளில் கட்டணமின்றி படிக்கும் வாய்ப்பு - ஷ்ரேஷ்டா நுழைவுத்தேர்வு - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 12 - Daily Dhuniya

Breaking

Tuesday, April 5, 2022

பள்ளிகளில் கட்டணமின்றி படிக்கும் வாய்ப்பு - ஷ்ரேஷ்டா நுழைவுத்தேர்வு - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 12

ஷ்ரேஷ்டா நுழைவுத்தேர்வு

கல்வியில் சிறந்து விளங்கும் எஸ்.சி., மாணவர்கள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டணமின்றி படிக்கும் வாய்ப்பை வழங் குகிறது ‘ஷ்ரேஷ்டா நுழைவுத்தேர்வு! முக்கியத்துவம்:

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கான நுழைவுத்தேர்வை என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

தேசிய அளவிலான இந்துழைவுத் தேர் வில் சிறப்பாக செயல்படும் 3,000 மாண வர்களுக்கு, மத்திய அரசு உயர்தர கல் வியை இலவசமாக வழங்குகிறது.

தேர்வு செய்யப்படும் மாணவர்கள் 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப் பில் சிறந்த சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சேர்க்கப்படுவர்.

தகுதி: ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு குறைவான குடும்ப வருமானம் கொண்ட எஸ்.சி., பிரிவைச் சேர்ந்த மாணவர்கள்!

தேர்வு முறை: ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கேள்விகள் கேட்கப்படும்.

நேரடித் தேர்வாக நடைபெறும் இந்துழை வுத்தேர்வை எழுத விரும்பும் எஸ்.சி., மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. தேர்வு காலம்: 3 மணி நேரங்கள்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள மாணவர்கள் https://shreshta.nta.nic.in/ வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 12

தேர்வு நடைபெறும் நாள்: மே 7, பிற் பகல் 2:00 - 05:00 மணி வரை

விபரங்களுக்கு: https://nta.ac.in/ மற்றும் https://shreshta.nta.nic.in/

No comments:

Post a Comment