மத்திய அரசின் இலவச அரிசி இன்று முதல் வாங்கலாம் - Daily Dhuniya

Breaking

Friday, April 1, 2022

மத்திய அரசின் இலவச அரிசி இன்று முதல் வாங்கலாம்

தமிழக ரேஷன் கடைகளில், மத்திய அரசின் கூடுதல் இலவச அரிசி வினியோகம் இன்று துவங்க உள்ளது.

நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா இரண்டாம் பரவலை தடுக்க, 2021ல் ஊரடங்கு அமலானது. தலா 5 கிலோ கோதுமைஇதனால், மத்திய அரசு, 'கரீப் கல்யாண்' திட்டத்தின் கீழ், அந்த ஆண்டு மே, ஜூனில் முன்னுரிமை,

அந்தியோதயா கார்டுகளில் உள்ள ஒவ்வொருவருக்கும் கூடுதலாக தலா 5 கிலோ கோதுமை அல்லது அரிசி வழங்க, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதற்காக, தமிழகத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து, 1.65 லட்சம் டன் முதல் 1.80 லட்சம் டன் வரை அரிசி இலவசமாக வழங்கப் பட்டது.பின், இலவச அரிசி வழங்கும் திட்டத்தை, இந்தாண்டு மார்ச் வரை மத்திய அரசு நீட்டித்தது.
தற்போது, இத்திட்டத்தை வரும் செப்., வரை நீட்டித்துள்ளது.தமிழகத்தில் உள்ள, 93 லட்சம் முன்னுரிமை, 18 லட்சம் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு, மத்திய அரசின் கூடுதல் இலவச அரிசி வினியோகம் ரேஷன் கடைகளில் இன்று துவங்குகிறது.

'வீடியோ கான்பரன்ஸ்'

இதற்கிடையே, கரீப் கல்யாண் திட்ட அரிசி வினியோகம் தொடர்பாக, மத்திய உணவு துறை அதிகாரிகள், தமிழகம் உட்பட அனைத்து மாநில அதிகாரிகளுடன் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

No comments:

Post a Comment