இரட்டை பட்டப்படிப்பு - தலையங்கம் - Daily Dhuniya

Breaking

Tuesday, April 19, 2022

இரட்டை பட்டப்படிப்பு - தலையங்கம்



இரட்டை பட்டப்படிப்பு புதிய தேசிய கல்விக் கொள்கையில் (என்இபி) அறிவித் துள்ள விதிகளின் அடிப்படையிலும். மாணவர்களின்பன் முகத்திறனை அனுமதிக்கும் வகையில் ஒரே சமயத்தில் இரண்டு முழு நேர பட்டப் படிப்புகள் மேற்கொள்வதை அனுமதிக்க பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அனுமதி அளித்துள்ளது. இரண்டு பட்டப் படிப்புகளை யும், ஒரே பல்கலைக்கழகத்திலோ அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களிலோ மாணவர்கள் மேற்கொள்ள முடியும். அதேநேரம், ஒரே நிலை படிப்புகளை மட்டுமே இரண்டாக சேர்த்து மேற்கொள்ள முடியும். அதாவது, இரண்டு இளநிலை பட்டப் படிப்புகள் அல்லது இரண்டு முதுநிலை பட்டப் படிப்புகள் அல்லது இரண்டு பட்டயப் படிப்புள் என்ற வகையில் மட்டுமே ஒரே சமயத்தில் படிக்க முடியும்.

ஒரே சமயத்திலான இரண்டு பட்டப் படிப்புகளை, மாணவர்கள் மூன்று வழிமுறைகளில் மேற்கொள்ள முடியும். முதலாவதாக, ஒரே சமயத்தில் இரண்டு பட்டப் படிப்புகளையும் நேரடி முறையில் கல்லூரிகளுக்குச் சென்று மேற்கொள்ளலாம். ஆனால், இரண்டு பட்டப் படிப்புக்களுக்கான வகுப்பு நேரம் மாறுபட்டு இருக்க வேண்டும்.

அடுத்ததாக, ஒரு பட்டப் படிப்பை நேரடிமுறையிலும், மற்றொன்றை இணைய வழி அல்லது தொலைதூர வழி யில் மேற்கொள்ளமுடியும். மூன்றாவதாக, இரண்டு பட்டப் படிப்புகள் வரை இணைய வழி அல்லது தொலைதூர வழியில் மேற்கொள்ள முடியும். இந்த புதிய நடைமு றையை ஏற்பது என்பது அந்தந்த பல்கலைக்கழகங்களின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளலாம். மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (சியஇடி) அல்லது அந்தந்த கல்வி நிறுவனங்களின் சேர்க்கை நடைமுறைகளின் அடிப்படையில், இந்த இரட்டை பட்டப் படிப்புகளில் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம். அவ்வாறு. ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கும் பல்கலைக்கழகங்கள்தான், அந்த இரண்டு பட்டப் படிப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்வுகள் குறுக்கிடாத வகையில் உரிய நடைமுறைகளை வகுத் துக்கொள்ள வேண்டும். யுஜிசி-யின் அறிவிப்பின்படி பார்த்தால், ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இரண்டு இளங்கலைப்படிப்புகளை அல்லது இரண்டு முதுகலைப் பட்டப்படிப்புகளை படிக்க முடியும். அதேபோல், பட்டப்படிப்புடன் பட்டயப்படிப்பையும் சேர்ந்து படிக்க இயலும். இது இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.

முனைவர் பட்டத்துக்கு பொருந்தாது என்று தெரி விக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான வழிகாட் டுதலை விரைவில் யுஜிசி வெளியிட உள்ளது. 2022-23ம் கல்வியாண்டுமுதல், ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்க ளில் வெவ்வேறு பட்டப்படிப்புகளை படிப்பதற்கான புதிய முறையைபல்கலைக்கழக மானியக்குழு நடைமுறைக்கு கொண்டு வந்தாலும் கூட, ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு என்பது சாத்தியமா? என்ற கேள்விக்கு, நிச்சயமாக அது மாணவர்களின் திறனைப் பொறுத்தே அமையும் என்பதே நிதர்சனம்.

No comments:

Post a Comment