அரசு பள்ளியில் சக மாணவர்களை துரத்தித் துரத்தி துடைப்பத்தால் தாக்கிய மாணவர் - Daily Dhuniya

Breaking

Tuesday, April 5, 2022

அரசு பள்ளியில் சக மாணவர்களை துரத்தித் துரத்தி துடைப்பத்தால் தாக்கிய மாணவர்

அரசு பள்ளியில் சக மாணவர்களை துரத்தித் துரத்தி துடைப்பத்தால் தாக்கிய மாணவர்

திண்டிவனம் அருகே அரசு பள்ளியில் வகுப்பறைக்குள் சக மாணவர்களை துடைப்பத்தால் விரட்டி, விரட்டி தாக்கும் மாணவனின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

திண்டிவனம் பகுதிகளில் மாணவர்கள் மோதல், பேருந்துகளில் படியில் தொங்கியபடி பயணம் செய்வது உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து மாணவர்கள் பேருந்தில் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வேப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் வகுப்பறைக்குள் உடன் படிக்கும் சக மாணவர்களை துடைப்பத்தால் விரட்டி, விரட்டி தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் மாணவரின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் பள்ளி மாணவர்களை நல்லொழுக்கம் படுத்த காவல்துறை, பள்ளிக்கல்வித் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment