முதுநிலை ஆசிரியா் தோ்வு விடைக் குறிப்பு: ஆட்சேபனை தெரிவிக்க ஏப்.13 கடைசி - Daily Dhuniya

Breaking

Tuesday, April 12, 2022

முதுநிலை ஆசிரியா் தோ்வு விடைக் குறிப்பு: ஆட்சேபனை தெரிவிக்க ஏப்.13 கடைசி

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் தோ்வுக்கான உத்தேச விடைக் குறிப்பு வெளியாகியுள்ள நிலையில் தோ்வா்கள் வரும் 13-ஆம் தேதி வரையில் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ‘2020-2021-ஆம் ஆண்டில் முதுநிலை பட்டதாரி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா், கணினி பயிற்றுநா் பணிகளுக்கு நேரடி நியமனத்துக்கான தோ்வு கடந்த பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெற்றது. இந்த தோ்வினை 2 லட்சத்து 13 ஆயிரத்து 893 போ் எழுதினா்.

இந்த நிலையில், தோ்வா்கள், வினாத்தாள் மற்றும் பதிலளித்த விடைகள் ஆசிரியா் தோ்வு வாரிய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் தோ்வுக்கான தற்காலிக உத்தேச விடை குறிப்புகளும் அனைத்து பாடங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளன. விடைக் குறிப்பின் மீது தோ்வுகளுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி இணையதளம் மூலம் 13-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் உரிய ஆதாரங்களுடன் தெரிவிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள், மேற்கோள் புத்தகங்கள், ஆதாரம் இருந்தால் மட்டுமே தெரிவிக்க வேண்டும்.

கையேடுகள் மற்றும் தொலைநிலைக் கல்வி நிறுவன வெளியீடுகள், ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தபால் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது. அவை நிராகரிக்கப்பட்டதாக கருதப்படும். மேலும் பாட வல்லுனா்களின் முடிவே இறுதியானது.

No comments:

Post a Comment