தேர்வு அறையில் சோகம்.. மயங்கி விழுந்து மாணவி மரணம்..! - Daily Dhuniya

Breaking

Tuesday, March 29, 2022

தேர்வு அறையில் சோகம்.. மயங்கி விழுந்து மாணவி மரணம்..!

கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகா ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனுஸ்ரீ (16). இவர், டி.நரசிபுரா அருகே மாதேபுரா உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கின. இதையடுத்து மாணவி அனுஸ்ரீ, அவருக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையமான டி.நரசிபுரா வித்யோதயா ஜூனியர் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்திருந்தார். அவர் தேர்வு எழுத தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார். உடனே அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவி அனுஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக டி.நரசிபுரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க | நிதிச்சுமையில் தவிக்கும் சென்னை பல்கலைக்கழகம்

அங்கு, மாணவி அனுஸ்ரீயை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும், அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர்.

இதை கேட்டு அவரது பெற்றோர் கதறி அழுதனர். மேலும் சக மாணவ - மாணவிகளும் சோகத்தில் மூழ்கினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சோகம் நிலவுகிறது.

No comments:

Post a Comment