ஆசிரியர் மீது வழக்குப்பதிவு - Daily Dhuniya

Breaking

Friday, March 4, 2022

ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

3ம் வகுப்பு மாணவிகளிடம் சில்மிஷம் அரசு பள்ளி ஆசிரியருக்கு தர்மஅடி

பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 43 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் பொதட்டூர்பேட்டையை சேர்ந்த ஜெயகோபி(46) என்ற ஆசிரியர் 3ம் வகுப்பு படித்து வரும் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் கிராம மக்களுடன் நேற்று பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆசிரியரை அடித்து உதைத்துள்ளனர். தகவலின்பேரில் பள்ளிக்கு விரைந்து வந்த பள்ளிப்பட்டு உதவி காவல் ஆய்வாளர் கண்ணையா மற்றும் போலீசார் பொதுமக்களிடமிருந்து ஆசிரியரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும், புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment