'தமிழ்நாட்டில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு அனுமதி?`: அமைச்சர் பொன்முடி தகவல் - Daily Dhuniya

Breaking

Wednesday, March 23, 2022

'தமிழ்நாட்டில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு அனுமதி?`: அமைச்சர் பொன்முடி தகவல்

தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம் என சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு எந்த விதத்தில் நுழைய முயற்சித்தாலும் முதலமைச்சர் தீவிரமாக எதிர்பார் என அமைச்சர் பொன்முடி கூறினார். நாடு முழுவதும் 45 மத்திய பல்கலை.யில் இளநிலை கல்வி பயில பொது நுழைவுத் தேர்வு அவசியம் என்று யுஜிசி அறிவித்த நிலையில் சட்டப்பேரவைல் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உறுதிப்பட தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானிய குழு சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில், இது தொடர்பாக சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் உள்ள கலை கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் எக்காலத்திலும் எந்த காரணத்திற்காகவும் நுழைவுத் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என்றார். தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு எந்த ரூபத்தில் நுழைய முயற்சித்தாலும் முதல்வர் ஸ்டாலின் அதனை தீவிரமாக எதிர்ப்பார் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பொன்முடி 'தமிழ்நாட்டிற்குள் புதிய கல்விக் கொள்கை நுழைவதற்கு விடவே மாட்டோம்.புதிய கல்விக் கொள்கைகளை எதிர்ப்போம், தடுத்து நிறுத்துவோம் என முதல்வர் ஸ்டாலின் பலமுறை கூறியுள்ளார். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முதல்வர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இதனை வலியுறுத்தி மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.' என்பதையும் எடுத்துரைத்தார். .

No comments:

Post a Comment