மாணவர்கள் வெளிநாடு செல்ல யார் காரணம்? - Daily Dhuniya

Breaking

Friday, March 4, 2022

மாணவர்கள் வெளிநாடு செல்ல யார் காரணம்?

மாணவர்கள் வெளிநாடு செல்ல முந்தைய அரசுகளே காரணம்

''மருத்துவம் படிக்க வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு முந்தைய அரசுகளே காரணம்,'' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக, பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிக்க | நாளை ( 05.03.2022 ) NMMS தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் கவனத்திற்கு!

இந்நிலையில், உக்ரை னில் இருந்து மீட்டு வரப்பட்ட உ.பி.,யை சேர்ந்த மருத்துவ மாணவர்களுடன், பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: உக்ரைனில் இருந்து மீட்டு வரப்பட்ட பல மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் தங்கள் கோபத்தை என்னிடம் வெளிப்படுத்தினர். இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில் கோபம் வருவது இயல்பு தான்.

தங்கள் பிள்ளைகளை அவ்வளவு துாரம் அனுப்பி படிக்க வைக்க, எந்தப் பெற்றோரும் விரும்ப மாட்டார்கள். நாட்டை ஆட்சி செய்த முந்தைய அரசுகள் மருத்துவப் படிப்புக்கான கொள்கைகளை முறையாக வகுத்திருந்தால், மாணவர்கள் வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அந்த தவறுகளை சரி செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment