செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே ஒரு கிராமத்திலுள்ள அரசு பள்ளியை சேர்ந்த மாணவிகள் சிலர் அரசு பஸ்சில் பீர் குடித்தவாறு ஆரவாரம் செய்யும் காட்சி வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக வைரலாக பரவி வருகிறது. இந்த காட்சிகள் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த சமூகத்தில் உள்ள இளைய தலைமுறை மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்வதுபோல் உள்ளதாக பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், ‘பெண் பிள்ளைகள் இப்படி மது அருந்துவதும், அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்புவதும் சமூக சீர்கேட்டை சிதைப்பதாக உள்ளது. மேலும், இப்படிப்பட்ட பெண் பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிப்பதாக உள்ளது.
இந்த செயல் தவறானதாக இருந்தாலும் கூட இதுபோன்ற வீடியோக்களை எதிர்கால சமூக நலனுக்காக மற்றவர்களுக்கு பகிராமல் இருந்தால் நல்லது. மேலும், பெற்றோர்களும் பெண் பிள்ளைகளை கண்டிப்புடனும், கவனிப்புடனும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றனர்.

No comments:
Post a Comment