புதிதாக தொடங்கிய அரசு தொடக்கப்பள்ளிக்கு டிரான்ஸ்பரில் சென்ற ஆசிரியர்களுக்கு மார்ச் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் ஜோசப் சேவியர் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, தமிழகத்தில் 2021 ஜன., 21 முதல் புதிதாக தொடக்க பள்ளிகள் திறக்கப்பட்டன. இப்புதிய பள்ளிகளுக்கு அருகில் உள்ள பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் மாற்றுப்பணியாக நியமிக்கப்பட்டனர். இப்பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடம் வழங்கி விட்டனர். தற்போது நடந்த டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் பெற்று சென்று விட்டனர். ஆனால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை திட்டத்தில் (ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,) புதிய தொடக்கப்பள்ளி பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் மாறுதல் பெற்று சென்ற ஆசிரியர்களை புதிய பள்ளிக்கு மாற்றம் செய்யப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கருவூலகம் மூலம் இந்த ஆசிரியர்களுக்கு மார்ச் சம்பளத்தை பெற முடியாத நிலை ஏற்படுகிறது.
கல்வி மற்றும் கருவூலகத்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தொடக்க பள்ளிகளுக்கு மாறுதல் பெற்று சென்ற தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

No comments:
Post a Comment