தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் நடப்பு கல்வி ஆண்டின் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இறுதி கட்ட கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் நடப்பு கல்வி ஆண்டின் (2021-22) பட்டமேற்படிப்பு மாணவர்கள் (நிறுவன ஒதுக்கீடு) சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த பிப்.21ம் தேதி நடைபெற்றது. இந்த நிறுவனத்தில் பட்டமேற்படிப்பு (எம்டி (சி)) படிப்பிற்காக மொத்தமாக 58 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய கோட்டா மூலமாகவும், மீதமுள்ள 50 சதவீத இடங்கள் இந்த நிறுவனத்தில் நடத்தப்படும் கலந்தாய்வின் மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.
இந்தநிலையில் அகில இந்திய கோட்டா மூலமாக நிரப்பப்படும் இடங்கள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், இந்நிறுவனத்தினால் நிரப்பப்படும் இடங்களில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான கலந்தாய்வு இன்று காலை 10 மணி அளவில் இந்நிறுவனத்தில் நடைபெறுகிறது. ஏற்கெனவே, இந்த நிறுவனத்தில் நடத்தப்பட்ட முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று தேர்வானவர்களும், அகில இந்திய கோட்டா மூலம் தேர்வானவர்களும், இந்த இறுதி கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இதையும் படிக்க | புதிய ஓய்வூதியத் திட்டம் அவசியமா? ஆண்டுக்கு அரசுக்கு ரூ.3,000 கோடி கூடுதல் செலவு
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையினரால் நடத்தப்பட்ட கலந்தாய்வில் தேர்வு பெற்று பிற கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பில் சேர்ந்தவர்கள் உரிய ஆவணங்கள், அசல் சான்றிதழ்களுடன் இந்த இறுதிச்சுற்று கலந்தாய்வில் பங்கேற்கலாம்.அதுமட்டுமில்லாமல் பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்பிற்கான இந்த கல்வியாண்டு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற தகுதியானவர்களுக்கான நேர்காணலும், இன்றே நடைபெறும்.

No comments:
Post a Comment