தமிழக அரசு சார்பில் நாளை வேலை வாய்ப்பு முகாம் - Daily Dhuniya

Breaking

Saturday, March 19, 2022

தமிழக அரசு சார்பில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

தமிழக அரசு சார்பில், நாளை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதனை, இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்போரூர் ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. வண்டலூர் கிரசண்ட் பொறியியல் கல்லூரியில் நாளை (20ம் தேதி) தமிழக அரசு சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் 500க்கும் மேற்பட்ட மென்பொருள், ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான ஊழியர்களை தேர்வு செய்யஉள்ளது. இந்த ஒரு நாள் முகாமில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த முகாமில் தேர்வு செய்யப்பட உள்ளோருக்கு, தமிழக முதல்வரால், பணி ஆணை வழங்கப்பட உள்ளது. இதையும் படிக்க | பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு
எனவே, திருப்போரூர் ஒன்றிய கிராமங்களை சேர்ந்த 8 முதல் முதுநிலைக் கல்வி வரை படித்த ஆண்கள், பெண்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு திமுக ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இந்த தகவலை கிராம மக்களுக்கு எடுத்துக் கூறி இந்த முகாமில் பங்கேற்று பயனடைய கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment