பிளஸ்2 தேர்வு எழுதும் மாணவர்கள்; திருத்திய பட்டியல் வெளியீடு - Daily Dhuniya

Breaking

Tuesday, March 8, 2022

பிளஸ்2 தேர்வு எழுதும் மாணவர்கள்; திருத்திய பட்டியல் வெளியீடு

பிளஸ்2 தேர்வு எழுதும் மாணவர்கள்; திருத்திய பட்டியல் வெளியீடு

சென்னை: பள்ளிகள் மூலம் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் திருத்திய பட்டியல் பதிவிறக்கம் செய்து கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

இதையும் படிக்க | வெற்றிலையில் 1330 திருக்குறள் எழுதி அரசு பள்ளி தமிழ் ஆசிரியை சாதனை: கின்னஸ் புத்தகத்துக்கு முயற்சி

நடப்பு 2022ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலில் மாணவர்களின் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் செய்ய கடந்த டிசம்பர் 24ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் பேரில் தயாரிக்கப்பட்ட மே 2022ல் நடக்க உள்ள பிளஸ் 2 தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் தேர்வு எண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தலைமை ஆசிரியர்கள் மார்ச் 8ம் தேதி முதல் 31ம் தேதி வரை தேர்வுத்துறை இணைய தளமான, www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment