கொரோனா தொற்று மூன்றாவது அலை பரவல் காரணமாக கல்லூரி பருவத்தேர்வுகள் ஆன் லைன் மூலம் நடத்தப்படும் எனவும் இறுதி பருவத்தேர்வுகள் நேரடியாக ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்படும் என்றும் தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் கடந்த மாதம் 21ம் தேதி அறிவித்திருந்தார்.
இதையடுத்து, பருவத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன், கல்வி நிறுவனங்களின் நம்பகத்தன்மையும் பாதிக்கப்படும் எனக் கூறி ஆன் லைன் மூலம் தேர்வுகள் நடத்த தடை விதிக்க கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

No comments:
Post a Comment