நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் அரசியல் சாசன கடமையை ஆளுநர் செய்யவில்லை என்று சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். இன்று நீட் விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதல்வர் சில தினங்களுக்கு முன்னர் அழைப்பு விடுத்து இருந்த நிலையில், அதில் அதிமுக, பாஜக, புரட்சி பாரதம் ஆகிய காட்சிகள் புறக்கணித்தது.
இந்தநிலையில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பாமக, விசிக, மதிமுக, மமக, தவாக, கொமதேக ஆகிய 10 கட்சிகள் பங்கேற்று தொடங்கிய கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதை காண்போம், நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் அரசியல் சாசன கடமையை ஆளுநர் செய்யவில்லை.
நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று முடிவு செய்த மாநிலம் தான் தமிழ்நாடு என அவர் தெரிவித்தார்.
அதையடுத்து பேசிய அவர், 2006-ம் ஆண்டு டாக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டது. நுழைவு தேர்வை ரத்து செய்யும் தமிழ்நாடு அரசின் சட்டம் அரசியலமைப்பு சட்டப்படி செல்லும் என 2006ல் ஒன்றிய அரசு தெரிவித்தது என குறிப்பிட்டார். மேலும் நுழைவுத் தேர்வை ஒழிக்கும் சட்டத்துக்கு 2006ம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருந்தார்; அதை நீதிமன்றமும் உறுதி செய்தது. அரசியலமைப்பு விதிப்படி தனது கடமையை ஆளுநர் செய்யவில்லை. நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநரிடம் நேரில் சென்று வலியுறுத்தினோம். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா, 8 கோடி மக்களின் உணர்வை வெளிப்படுத்தக்கூடியது. மேலும் நீட் விலக்கு மசோதாவை 142 நாட்கள் கிடப்பில் போட்டு விட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார் என அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில், நீட் விலக்கு தொடர்பாக சட்டமன்ற சிறப்பு கூட்டத் தொடரை நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது, சிறப்பு கூட்டத்தொடரில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மீண்டும் நிறைவேற்றப்படும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கான தேதியை விரைவில் சபாநாயகர் அறிவிப்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment