அரசு பணிகளில் பதவி உயர்வுக்கு இடஒதுக்கீடு - விவரங்கள் தாக்கல் செய்ய உத்தரவு - Daily Dhuniya

Breaking

Friday, February 25, 2022

அரசு பணிகளில் பதவி உயர்வுக்கு இடஒதுக்கீடு - விவரங்கள் தாக்கல் செய்ய உத்தரவு

அரசு பணிகளில் பதவி உயர்வுக்கு எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பல மனுக்கள் உசச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்து முடித்து வைக்கப்படாலும், ஒருசில வழக்குகள் தற்போது வரையில் நிலுவையில் இருக்கின்றன.

இதையும் படிக்க | குழந்தைகளுக்கு வாங்கி தர சூப்பர் புத்தகங்கள்

இந்த நிலையில் எஸ்சி,எஸ்டி பிரிவில் ஏற்கனவே இட ஒதுக்கீடு பெற்று பணிக்கு வந்தவர்களுக்கு, பதவி உயர்விலும் மீண்டும் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கானது நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ் மற்றும் பி.ஆர்.கவாய் தரப்பில் விசாரணைக்கு வந்தபோது, “பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஒன்றிய அரசு ஆதரவு தெரிவித்திருந்தாலும், ஒவ்வொரு பதவியிலும் எவ்வளவு பிரதிநிதித்துவம் உள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. அதனால் அரசுப் பணிகளில் எஸ்.சி., மற்றும் எஸ்.டி பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் தொடர்பான புள்ளி விவரங்கள் என்னென்ன?. அந்த பட்டியல் எதனை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதற்கான முழு விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்,’ என ஒன்றிய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

No comments:

Post a Comment