சுயதொழில் தொடங்க தாட்கோவில் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு - Daily Dhuniya

Breaking

Sunday, February 27, 2022

சுயதொழில் தொடங்க தாட்கோவில் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

சுயதொழில் தொடங்க விருப்பம் உள்ள பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர் தாட்கோவில் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

சென்னை: சுயதொழில் தொடங்க விருப்பம் உள்ள பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர் தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மருத்துவ மையம், மருந்தகம், கண் கண்ணாடியகம், முடநீக்க மையம், ரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல், மேம்படுத்துதல் உள்ளிட்ட சுயதொழில் தொடங்க உள்ள பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்கள், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். மருத்துவ மையம் அமைப்பதற்கு மற்றும் மேம்படுத்துவதற்கு குறைந்தபட்சம் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் சித்தா, ஆயுர்வேத மருத்துவம், மற்றும் இயற்கை வைத்தியம், ஆகியவற்றில் ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படிக்க | Teachers

மருந்தகம் அமைப்பதற்கு டி.பார்ம், பி.பார்ம் பயின்றிருத்தல் வேண்டும். கண்ணாடியகம், அமைப்பதற்கு சம்மந்தப்பட்ட படிப்பு முடித்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். கண் கண்ணாடியகம் அமைப்பதற்கு சம்மந்தப்பட்ட படிப்பு முடித்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். முடநீக்கு மையம் அமைப்பதற்கு உரிய முடநீக்கவியல் பட்டபடிப்பு படித்து உரிய கவுன்சிலில் பதிவு செய்தமைக்கு சான்று வேண்டும். ரத்த பரிசோதனை நிலையம் அமைப்பதற்கு தகுதி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இந்திய மருத்துவ கழகம் தொடர்புடைய நிறுவனத்தில் தகுதி வாய்ந்த அதிகாரியிடம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். திட்ட தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும். திட்டத் தொகையில் மானிய தொகை தவிர மீதமுள்ள தொகை வங்கிக் கடனாகும். தாட்கோ விடுவிக்கும் மானியத் தொகைக்கு மட்டும் திட்ட தொகையின் உச்ச வரம்பு ரூ.7.50 லட்சமாகும். பட்டியல் இனத்தவராக இருப்பின் http://application.tahdco.com, பழங்குடியினராக இருப்பின் http://fast.tahdco.com என்ற தாட்கோ இணையதள முகவரியில் கீழ்காணும் ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் ஓராண்டுக்குள் பெற்றிருக்க வேண்டும். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, விலைப்புள்ளி GSTIN எண்ணுடன், திட்ட அறிக்கை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிக்கான சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகம், தொலைபேசி எண் 044-25246344, கைப்பேசி எண் 9445029456 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment