பிப்.14 முதல் எம்பிபிஎஸ் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்
எம்பிபிஎஸ் முதலாமாண்டு வகுப்புகள் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் தொடங்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் மேலும் கூறியதாவது, கரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு வகுப்புகள், விடுதிகளை நடத்த வேண்டும். 7.5% இடஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது.
அரசு பள்ளி மாணவர்கள் எவ்வித கல்வி உதவித்தொகைக்கும் விண்ணப்பிக்கக் கூடாது. ஆள்மாறாட்டத்தை தவிர்க்க மாணவர்களின் கைரேகைகளை கண்டிப்பாக பெற வேண்டும். மார்ச் 31க்குள் கைரேகைகளை வழங்காத மாணவர்கள் வகுப்புக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதற்கட்ட கலந்தாய்வு மூலம் 5,076 மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment