மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே திருப்புதல் தேர்வு எழுதலாம்
கோவையில் 10,12 - ம் வகுப்பு மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே திருப்புதல் தேர்வு எழுதலாம் - வாட்ஸ்அப்பில் வினாத்தாள் அனுப்பிவைக்கப்படும். கோவையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் வீட்டில் இருந்தே திருப்புதல் தேர்வு எழுத கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக வரும் 31-ம் தேதி வரை 10,11 மற்றும் 12-ம் வகுப்பு உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிப்பதாக தமிழக அரசு அறிவித்தது. இதனால், வரும் 19-ம் தேதி முதல் 10,12-ம் வகுப்புகளுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு `கோவை மாவட்டத்தில் திருப்புதல் தேர்வு ஆன்லைன் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது. நடத்த இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கீதாகூறும்போது, “அரசின் அறிவிப்பை தொடர்ந்து நேரடியாக தேர்வுகள் நடத்த நிலை முடியாத உள்ளது. இருப்பினும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி உள்ளனர். எனவே, அவர்களின் நலனை கருத்தில் கொண்டு அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர்கள்மூலமாக ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட தேர்வு அட்டவணையின்படி வினாத்தாள்களை தயார் செய்து மாணவர்களின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் வீட்டில் இருந்து தேர்வு எழுதுவார்கள். தேர்வு எழுதிய பின் விடைத்தாளை பிடிஎஃப் வடிவில் வாட்ஸ்அப்பில் பதிவு செய்ய வேண்டும். இதனை ஆசிரியர்கள் மதிப்பீடு செய்வார்கள். நேரில் பள்ளிக்கு வரும்போது அந்த விடைத்தாளை எடுத்துவர வேண்டும். இவ்வாறு தேர்வு நடத்துவதன் மூலம் மாணவர்களுக்கு தேர்வு எழுதிய அனுபவம் கிடைக்கும். படித்ததும் வீணாகாது" என்றார்.

No comments:
Post a Comment