IELTS தேர்வை எழுதும் இளைஞர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரிப்பு! - Daily Dhuniya

Breaking

Thursday, January 13, 2022

IELTS தேர்வை எழுதும் இளைஞர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரிப்பு!

உயர்கல்வி அல்லது வேலை வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு செல்ல தேவையான ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வை எழுதும் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை, கொரோனா தொற்றுநோய்க்கு பிறகான காலகட்டத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக ஐ.டி.பி.,யின் தெற்காசியா பிராந்திய இயக்குநர் பியூஷ் குமார் தெரிவித்துள்ளார்.

ஐ.இ.எல்.டி.எஸ்., எனும் தி இன்டர்நேஷனல் இங்கிலீஷ் லேங்குவேஜ் டெஸ்டிங் சிஸ்டம்’ ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டிராதவர்களுக்காக நடத்தப்படும் உலகளாவிய தரப்படுத்தப்பட்ட ஆங்கில மொழித் திறனுக்கான சோதனையாகும்.

உலகெங்கிலும் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களால் ஆங்கில மொழி புலமையின் குறிகாட்டியான இந்த தேர்வை எழுதுவதன் மூலம் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, அயர்லாந்து உட்பட பல்வேறு வளர்ந்த நாடுகளில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment