Flash News: நீட் தேர்வு விவகாரம் - நாளை (8.1.2022) அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் - Daily Dhuniya

Breaking

Friday, January 7, 2022

Flash News: நீட் தேர்வு விவகாரம் - நாளை (8.1.2022) அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம்

நீட் தேர்வு விவகாரத்தில் நாளை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 6.1.2022 அன்று ‘நீட்’ தேர்வு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டுவது குறித்து, சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் அறிவித்தார். இதுகுறித்து, சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி நாளை (8.1.2022) காலை 10.30 மணியளவில் தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment