மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம்; பல்கலைகளுக்கு யு.ஜி.சி., தகவல் - Daily Dhuniya

Breaking

Thursday, January 20, 2022

மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம்; பல்கலைகளுக்கு யு.ஜி.சி., தகவல்

நம் நாடு சுதந்திரம் அடைந்த 75ம் ஆண்டு விழாவை 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என மத்திய அரசு கொண்டாடி வருகிறது.

இதையொட்டி ஜன. 1 - பிப். 7 வரை நாட்டின் 30 மாநிலங்களில் இருந்து 75 கோடி பேர் பங்கேற்கும் சூரிய நமஸ்காரம் நிகழ்வை நடத்த தேசிய விளையாட்டு கூட்டமைப்பு திட்டமிட்டது. நாட்டின் 30 ஆயிரம் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மூன்று லட்சம் மாணவர்களையும் இதில் பங்கேற்க செய்ய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. அன்று தேசிய கொடி முன் இசை ஒலிக்க மாணவர்கள் சூரிய நமஸ்காரத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என உயர் கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி. அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment