நடப்பு கல்வியாண்டில் வேளாண் பல்கலை.யில் மாணவர் சேர்க்கை தாமதம் - Daily Dhuniya

Breaking

Tuesday, January 11, 2022

நடப்பு கல்வியாண்டில் வேளாண் பல்கலை.யில் மாணவர் சேர்க்கை தாமதம்

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் காரணமாக. வேளாண் பல்கலைக் கழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தாமதம் ஆகியுள் ளது. இதுதொடர்பாக, ஆலோசனை கேட்டு அரசுக்கு பல்கலை. நிர்வாகத் நினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், மாநிலம் முழுவதும் 14 உறுப்புக் கல்லூரிகள், 28 உள்ளன. இணைப்புக் கல்லூரிகள் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை என 11 பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வோர் கல்வியாண்டிலும், இப்பல்கலைக்கழகத்தில் சேர பல ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கின்றனர். அவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, கலந்தாய்வு நடத்தப்பட்டு சேர்க்கப்படுகின்றனர்.

அதன்படி, நடப்பு கல்வியாண்டில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட இருந்தது. ஆனால், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்ததால், தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து. 10-க்கும் மேற்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், அடுத்த உத்தரவு வரும் வரை எந்த மாணவர் சேர்க்கையும், பணி நியமனமும் கூடாது, ஏற்கெனவே செய்யப்பட்ட பணி நியமனங்கள், மாணவர் சேர்க்கைகளை எந்த வகையிலும் தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிட்டனர். பிப்ரவரி மாதம் விசாரணை நடைபெற உள்ளது.

இதன் காரணமாக, வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்தப் படாமல் உள்ளன. பல ஆயிரம் மாணவர்கள், வேளாண் படிப்புகளில் சேர முடியாமல் உள்ளனர். மாணவர்கள் மற்றும் பெற்றோர்

கூறும்போது, "மாணவர்களின் நலன் கருதி அரசு, வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில், குறிப்பிட்ட 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்கான இடங்களை மட்டும் நிரப்பாமல், பிற இடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை நீதிமன்றம் மூலம் மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.

வேளாண் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் கூறும்போது. “மாணவர் சேர்க்கை தொடர்பாக, அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனை கேட்டு. தமிழக அரசின், வேளாண்மைத்துறை உயர் அலுவலர்களுக்கு பல்கலைக் கழகத்தின் சார்பில் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது" என்றனர்.

No comments:

Post a Comment