ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
கடந்த அதிமுக ஆட்சியின் போது ஜாக்டோ ஜியோ சார்பாக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஈடுபட்டதால் பல நூறு ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படும் என சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் அறிவிப்பு செய்தார். அதன்பின் அது அரசாணையாகவும் வெளிவந்தது. இதன்படி பதவி உயர்வு இழந்த ஆசிரியை மணிமொழிக்கு பதவி உயர்வை வழங்க கோரி தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலகத்தில் நேற்று மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில்ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் பேச்சுவார்த்தை நடத்தி ஆசிரியைக்கு பதவி உயர்வு ஆணையை வழங்கினார். அதன்பின் போராட்டம் கைவிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் புதுக்கோட்டை கல்வி மாவட்ட அதிகாரி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று இரவு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்திய போது அதில் கலந்து கொண்டவர்கள் மீது 17 பி எனும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த அரசின் முதல்-அமைச்சர், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்தார். இதனால் மற்ற மாவட்டங்களில் பதவி உயர்வுக்கு பாதிப்பான ஆசிரியர்களுக்கு மீண்டும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதில் மொத்தம் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட கல்வி அதிகாரியிடம் பல முறை எடுத்துக்கூறியும் நடவடிக்கை இல்லை. அவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கிட ஆணை பிறப்பிக்க வேண்டும்’’ என்றனர். இதனை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோஷங்கள்
கல்வி அதிகாரியின் அலுவலகத்தில் உள்ளே ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட போது கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜீவன்ராஜ் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தின் போது மற்றொரு அறையில் கல்வி அதிகாரி மஞ்சுளா மற்றும் அதிகாரிகள் உள்ளே அமர்ந்திருந்தனர். இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிஆசிரியர்கள் நேற்று மாலை திடீரென தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.2019ல் ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் பதவி உயர்வு, பணப்பயன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்வதாக அறிவித்து அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த உத்தரவுப்படி பதவி உயர்வை இழந்த காளையார்கோவில் ஒன்றிய ஆசிரியர் மணிமொழிக்கு பதவி உயர்வை வழங்குமாறு நேற்று மாலை மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதனிடம் கோரிக்கை வைத்து மாவட்ட தலைவர்அமலநாதன் தலைமையில்காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகிகள் மாவட்ட கல்வி அலுவலர் இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து பதவி உயர்வு உத்தரவை ஆசிரியருக்கு மாவட்ட கல்வி அலுவலர் வழங்கினார்.

No comments:
Post a Comment