பாலியல் தொல்லை புகாரில், தனியார் பள்ளி ஆசிரியரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
.மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். தடுப்பு சட்டம்பின், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்க, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், 2021 ஜூன் மாதம் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ராஜகோபாலனின் மனைவி, மனு தாக்கல் செய்தார்.
மனு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.சுரேஷ் ஆஜராகி, ''ஐந்து ஆண்டுகளுக்கு முன் பாலியல் தொல்லை அளித்ததாக, 2021 ஜூனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
''இந்த ஒரே வழக்கின் அடிப்படையில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், 'ஆன்லைன்' வகுப்பு இல்லை,'' என்றார்.மனுவை விசாரித்த, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஒரே வழக்கின் அடிப்படையில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் சம்பவத்துக்கு, இந்தஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைது உத்தரவில், ஆன்லைன் வகுப்பின் போது தவறாக நடந்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. அதற்கு ஆதாரமாக, நான்கு மாணவர்கள் மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் அளித்திருப்பதாக, அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த நான்கு பேரும் 21 வயதை கடந்தவர்கள்; இவர்கள், 2020 -- 21ம் ஆண்டுகளில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்றிருக்க முடியாது. முகாந்திரமில்லைநான்கு பேரின் வாக்குமூலம், கைது முகாந்திரத்தில் இடம் பெறவில்லை. அவர்களின் பெயரை குறிப்பிடவில்லை.
கைதுக்கான முகாந்திரத்தில், ஆங்கிலம் மற்றும் தமிழ் நகலில், தேதியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. குறிப்பிட்ட நாட்களுக்குள், கைதுக்கான முகாந்திரங்கள் வழங்கப்படவில்லை. எனவே, மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:
Post a Comment