அரசு பள்ளி சுவரில் மழலையரை கவர்ந்திழுக்கும் வண்ண ஓவியங்கள் - பட்டாம்பூச்சி குழுவினர் அசத்தல் - Daily Dhuniya

Breaking

Thursday, January 20, 2022

அரசு பள்ளி சுவரில் மழலையரை கவர்ந்திழுக்கும் வண்ண ஓவியங்கள் - பட்டாம்பூச்சி குழுவினர் அசத்தல்

கொல்லிமலையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், மழலையரை கவர்ந்து இழுக்கும் வண் ணமிகு ஓவியங்கள் வரை யப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை ஒன்றி யம், ஊர்கலிங்கம்பட்டி யில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து உருவாக் கிய பட்டாம்பூச்சி குழு சார்பில், பள்ளி சுவர்கள் முழுவதும் ஓவியங்க ளால் வண்ணமயமாக் கப்பட்டு உள்ளது. தேசப் பற்று மிகுந்த ஓவியங்கள், இயற்கை காட்சிகளுடன் அமைந்த விலங்குகள், நீர்வீழ்ச்சி, வகுப்பினுள் காய்கறிகள், பழங்கள், பற வைகள், எழுத்துகள், வடி வங்கள் போன்ற மாண வர்கள் எளிதில் பார்த்து கற்கும் விதமான படங்கள் வரையப்பட்டது. மாணவர்கள் இப்படங்களை பார்த்து தாமும் வரை யும் மனப்பான்மையும், பள்ளிக்கு விடுப்பு எடுக் காமல் வரும் எண்ணமும் உருவாகியுள்ளதாக ஆசிரி யர்கள்தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் அரசு துவக்கப்பள் ளியில் பணியாற்றும் ஆசிறைகளில் ரியர் சந்தோஷ் குமார் கூறுகையில், 'என் தலை மையில் கடந்த 3 வருட மாக, இப்பணிகளை அரசு பள்ளி ஆசிரியர் களை ஒன்றிணைத்து பல மாவட்டங்களில் மலைப் புறபள்ளி,கிராமப்புற பள் ளிகள் என பட்டியலிட்டு, பள்ளிகளுக்கு விடுமுறை நாளில் சென்று மற்றும் கொரோனா ஊரடங்கு தளர்வு காலத்தில் பாது காப்பாக சமூக இடை வெளிகளோடு ஓவியம் வரைந்து வருகிறோம்.

விடு முறை நாளில் திருப்பூர். கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம்,போன்றமேற்பட்ட மாவட்டங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளுக்கு சென்று, இரவு பள் ளியிலேயே சமைத்து, அங்கியே தங்கி வண்ணமடித்து, வகுப்ப பாடம் சார்ந்த ஓவியங்கள், பள்ளி சுவரில் விழிப்புணர்வு, இயற்கை காட்சிகள் சார்ந்த ஓவியங் கள் வரைந்து வருகிறோம். எங்களுக்கு கிடைக்கும் விடுமுறையை வீணாக்கா மல், அரசு பள்ளி மாண வர்களுக்காகஇப்பணியை சேவையாக செய்து வரு கிறோம்,' என்றார். இவர் களை தலைமை ஆசிரியர் சந்திரமோகன், ஆசிரியை புவனேஸ்வரி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment