விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திருவாரூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ளடக்கிய விழுப்புரம் மண்டலத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.
மாணவர்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல், கற்பித்தல், பணிகளை மேம்படுத்தும் விதமாக ஆய்வுக்கூட்டம் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணிகளை மேம்படுத்தும் விதமாகவும். அரச நலத்திட்டங்களை மாணவர்களை முழுமையாக சென்றது குறித்தும், மாணவர்களின் உட்கட்டமைப்பு, மாணவர்களின் இடைநிற்றலை தவிர்த்தல், இல்லம் தேடி கல்வித்திட்டம், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் கூறியதாவது பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பழைய மிகவும் மோசமான நிலையில் இருக்கும் கட்டிடங்களை கண்டறிந்து இடிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்கு தனி பேருந்து வசதி கொண்டு வர வேண்டும் என்றால் அது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என தெரிவித்தார். 15 வயது முதல் 18 வயது வரையிலான அனைவருக்கும் தடுப்பூசி போட்ட பிறகு தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தார்.
பள்ளி பாடபுத்தகங்களில் பாலியல் குறித்த விழிப்புணர்வு இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் பாடங்கள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும் தற்போதைய சூழலில் அது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், குழந்தைகளை பொருத்தவரை குட் டச், பேட் டச் என்னவென்று தெரியும் வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். அதை கொண்டு வந்தால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இன்னும் நம்பிக்கையோடு பள்ளிக்கு அனுப்பி வைப்பார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
Wednesday, January 5, 2022
Home
Anbil magesh poiya mozhi minister
Announcements
Awareness
Educational Minister's
sex education
Students
பள்ளியில் பாலியல் விழிப்புணர்வு குறித்த புதிய திட்டம்! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு!!
பள்ளியில் பாலியல் விழிப்புணர்வு குறித்த புதிய திட்டம்! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு!!
Tags
# Anbil magesh poiya mozhi minister
# Announcements
# Awareness
# Educational Minister's
# sex education
# Students
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
Students
Tags:
Anbil magesh poiya mozhi minister,
Announcements,
Awareness,
Educational Minister's,
sex education,
Students
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment